ஜல்லிக்கட்டு விழாவில் புதிய உத்தரவு!. குவிக்கப்படும் காவல்துறையினர்!. - Seithipunal
Seithipunal



ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண் டும் என்று காவல்துறையினருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, திண்டுக்கல் போன்ற பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு இந்த வருடம் எந்த தடையும் இல்லாததால் புதிதாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். சிறிய அளவில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி ரீதியான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதில் உளவு பிரிவு போலீசார் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை விடவும் இந்தமுறை கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க தனி போலீஸ் அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu alert


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->