4-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு..! கதிகலங்கி போயிருக்கும் முக்கிய புள்ளிகள்.! முட்டை விநியோகத்தில் முறைகேடு..!!! - Seithipunal
Seithipunal


திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் உரிமையாளர்கள் குமாரசாமி வீடு, அலுவலக ஆடிட்டர் வீடு, முட்டை குடோன்கள் என 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர், தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

குமாரசாமி என்பவர் நடத்திவரும் கிறிஸ்டி ஃப்ரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு முட்டை, பருப்பு ஆகிய உணவு பொருட்களை விநியோகம் செய்துவருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 3 கோடி முட்டை சப்ளை செய்யும் டெண்டரை கடந்த 5 ஆண்டாக இந்த நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் இன்று 4 ஆவது நாளாக,  நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரி துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுவரை சோதனை நடத்தியதில், நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில் இதுவரை 10 கோடி ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக வருமான துறையினர் தெரிவித்தனர். 
மேலும், 1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என தகவல் வெளிவருகிறது. 

தொடர்ந்து,  கிறிஸ்டி நிறுவனத்தில், பல்வேறு முறைகேடுகள் வெளியே வருவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 4வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து, அந்த நிறுவனத்தில் கணக்காளர் கார்த்திகேயன்(35), நேற்று முன்தினம் நிறுவனத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax Raid To Namakkal Egg Industry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->