கிறிஸ்டி நிறுவனத்தின் பல கோடி மதிப்பிலான ஊழல் அம்பலம்..!! 5 நாட்கள் நடந்த சோதனை குறித்து வருமானவரி துறை முழு அறிக்கை தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் உரிமையாளர்கள் குமாரசாமி வீடு, அலுவலக ஆடிட்டர் வீடு, முட்டை குடோன்கள் என 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர், தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

குமாரசாமி என்பவர் நடத்திவரும் கிறிஸ்டி ஃப்ரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு முட்டை, பருப்பு ஆகிய உணவு பொருட்களை விநியோகம் செய்துவருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 3 கோடி முட்டை சப்ளை செய்யும் டெண்டரை கடந்த 5 ஆண்டாக இந்த நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. 

நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில், 5 நாட்கள் தொடர்ந்து வருமானவரி துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்தனர். 

5 நாட்களாக நடந்த சோதனையில், கணக்கில் வராத 17 கோடி ரூபாய் மற்றும் 10 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கிறிஸ்டி ப்ரைடு கிராம் நிறுவனம் மலேசியா, சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளது தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் அமைச்சர்கள் உள்பட பல்வேறு முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என தகவல் வெளிவருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து வருமான வரித்துறையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், சத்துணவிற்கு முட்டை வழங்கிய விவகாரத்தில், நடந்த வருமான வரி சோதனையில், கிருஸ்டி நிறுவனம் ரூ.1350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax Department Information For Namakal Kristi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->