கொடைக்கானலை விட்டு தெறித்தோடும் மக்கள்.! போராடும் காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர்.!! கண்ணீரில் கரைபுரளும் கொடைக்கானல்.!!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றது. தமிழகத்தில் வெயில் காலங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுப்புற சூழ்நிலைகளை அனுபவித்து வருகின்றனர். 

அந்த வகையில்., பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்கு மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்., அங்குள்ள மலை பகுதிகளில் வெயில் காலங்களில் அவ்வப்போது திடீரென காட்டுத்தீயானது பரவி பெரும் அசம்பாவிதங்களையும் ஏற்படுத்துகிறது. 

அந்த வகையில்., கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள வெள்ளப்பாறை காட்டுப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் திடீரென காட்டுத்தீயானது பரவ தொடங்கியது. திடீரென பரவத் தொடங்கிய காட்டுத்தீயானது மளமளவென பரவியதை கண்ட., அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும்., தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணையப்பு துறையினர் தீயை தொடர்ந்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராடி வருகின்றனர்., மேலும்., காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் குடியிருப்பு வாசிகளை காவல் துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். இந்த காட்டுத்தீயின் காரணமாக அங்குள்ள மரங்கள் மற்றும் புல்வெளிகள் அனைத்தும் தீயின் பிடியில் சிக்கி எரிந்து நாசமாகியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kodaikanal affected by forest fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->