அதிகாரிகள் வாகனச் சோதனை செய்த போது..! 15 அடி உயரத்தில் துாக்கி வீசப்பட்ட தம்பதியர் பரிதாபமாக பலி..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சி, ஆலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், பழனிச்சாமி (வயது36). இவர் சொந்தமாக வாடகை வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

நேற்று பழனிச்சாமி, தன் மனைவி மல்லிகா (வயது 32) உடன், செங்கப்பள்ளியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

விஷேசத்தில் கலந்து கொண்டு, திரும்ப அவிநாசி வழியாக, தெக்கலுாருக்கு வந்து கொண்டிருந்தனர். அவிநாசி – தேவராயன் பாளையம் அருகே உள்ள ஆறு வழிச்சாலை, பை பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ரோட்டின் வலது ஓரமாக, ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அந்த லாரியை, பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் கடந்து சென்ற போது, அந்த பைக்கிற்கு பின்னால் ஒரு கார் வேகமாக சென்றது. அந்தக் காரை, அதிகாரிகள் நிறுத்தச் சொன்னார்கள்.

ஆனால், அந்தக் கார் அவர்களைக் கண்டதும் வேகமாகச் சென்று, முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது பயங்கரமாக மோதியது.

இதனால், பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதியர் இருவரும் 15 அடி உயரத்திற்கு துாக்கி வீசப்பட்டு, சாலை ஓரத்தில் இருந்த இரும்பு ராடின் மீது, அவர்களி்ன் உடல் மோதியது.

இதனால், அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிகாரிகள் பயந்து போய், அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர். பின் சாலையில் சென்றவர்கள், காயம் பட்டவர்களை, அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் 300-க்கும் அதிகமானோர், பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டு, அந்த அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போலீசார் வந்து, அந்த அதிகாரிகள் மீது, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife killed in dangers accident in thiruppur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->