கடலில் காணாமல் போன தோழி - காப்பாற்ற முயன்ற 2 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் பதினான்கு பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

அப்போது மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்துள்ள நிலையில், ஒரு மாணவி மட்டும் திடீரென அலைகளில் சிக்கி மாயமாகியுள்ளார். இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் இருவர் அவரை தேடுவதற்காக கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களும் அலைகளில் சிக்கி மாயமானதையடுத்து, உடன் இருந்த சக மாணவர்கள் தேடியதில், முதலில் மாயமான ஹேமலதா என்பவரது உடல் மட்டும் சடலமாக கரை ஒதுங்கியது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடலோர காவல் படை போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு, மாயமான அபிலேஷ், ஜெகதீஷ் ஆகிய இரண்டு மாணவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த மாணவி ஹேமலதாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில், கல்லூரி மாணவி உயிரிழந்ததோடு, இருவர் மாயமாகியுள்ள சம்பவம் சக மாணவர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl died and two students missing in karaikal beach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->