அறையில் கிளம்பிய புகை.. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு என்னாச்சு? கடலூரில் பரபரப்பு - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றிட நீண்ட வரிசையில் இன்று வாக்கு செலுத்து வருகின்றனர். அதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 66,000 மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு நினைவு கட்டிடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த இயந்திரங்கள் அனைத்தும் நேற்று வாக்குப்பதிவை முன்னிட்டு அனைத்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கும் காவல்துறையினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தப் பணியின் போது மின்னல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளியின் நினைவு விழா கட்டிடத்தின் அறையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது எடுத்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர் விரைந்து சென்று கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டித்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric shortage in voting machine store room in Cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->