வயதான தம்பதியின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த தி.மு.க. பிரமுகர்!  உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை, தி. நகர் அப்துல் அஜீஸ் வீதியில் கிரிஜா என்ற பெண்ணிற்கு சொந்தமாக உள்ள வீட்டை , தி.மு.க பிரமுகரான ராமலிங்கம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். 

வயதான தம்பதிகளான கிரிஜாவும் அவரது கணவரும் சரியாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்யுமாறு ராமலிங்கத்திடம் தெரிவித்தனர். 

ஆனால் வீட்டை காலி செய்யாமல் ராமலிங்கம் காலம் தாழ்த்தி வந்ததால் கிரிஜா உயர் நீதிமனறத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தி.மு.க பிரமுகரை 48 மணி நேரத்திற்குள் வாடகை வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என சென்னை போலீசாரிடம் உத்தரவிட்டார். 

மேலும் ராமலிங்கத்தை போலீஸ் படை அனுப்பி வெளியேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ராமலிங்கம் இன்று காலை வீட்டை நானே காலி செய்து விடுகிறேன் என போலீசாரிடம் தெரிவித்தார்.

அதன்படி வாடகை வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்தார். தி.மு.க பிரமுகர் ராமலிங்கம் தானாக முன்வந்து நீதிமன்ற உத்தரவை ஏற்று வீட்டை காலி செய்து விட்டதால் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK leader vacated house after court order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->