திமுகவினரின் மிருகத்தனமான செயல்..? பறந்த பயங்கர ஆயுதங்கள் - பலரின் நிலை கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல் போட்டி இருந்தது.

ஓட்டுச்சாவடியை கைபற்றுவது போன்ற சம்பவங்கள் இங்கு நடந்தது இல்லை. துரதிர்ஷ்டவசமாக தி.மு.க., கூலிப்படையினர் அருமநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் பா.ஜ.க தொண்டர்களை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்டேன் என்று சொன்னதற்காக ஆரல்வாய்மொழியில் சுப்பையா என்பவரை தாக்கியுள்ளனர். மிருகத்தனமான தாக்குதல் நடத்தி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.தி.மு.க., வினர் கடந்த சில மாதமாக புரோட்டா சாப்பிட்டால் பணம் கொடுப்பதில்லை மட்டுமல்ல, கல்லாவில் இருக்கும் பணத்தை எடுத்து செல்கின்றனர்.

இதை ஊடகங்கள் காட்டியுள்ளது.ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பார்த்து அரசியல் ஆதாயம் தேடும் செயலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார்.

இதை விட ஒரு அவமானம் அரசியல் கட்சி தலைவருக்கு இருக்க முடியாது. மகா மட்டரகமான அரசியல். இந்த நிலை மாற வேண்டுமெனில் தமிழக மக்கள் தி.மு.க., வை பயங்கரவாத இயக்கமாக பார்த்து புறந்தள்ள வேண்டும்.

தேர்தல் முடிந்தாலும் ஆட்சியை பிடிக்கணும், உள்ளாட்சியை பிடிக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். தி.மு.க.வின் இந்த கனவை தகர்த்து எறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிருகத்தனமான செயல்கள் மூலம் திமுக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK-attacked-by-BJP-executives


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->