கட்டப்பஞ்சாயத்து.. மர்ம மரணங்களை மூடி மறைத்து.. கல்லாக்கட்டும் காவல் நிலையம்.! பொதுமக்கள் கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்கள் சரிவர விசாரிக்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

எஸ் பி, தனிப்பிரிவு போலீஸ் அதிகார தொணியுடன் நடந்து கொள்வது சக போலீசாருக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த  பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகப்படியாக நடக்கிறது என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு 11 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது பற்றிய எந்த உரிமையும் வெளிவரவில்லை. சிபிசிஐடி விசாரணை நடத்திய பின்னும் இந்த வழக்கில் முன்னேற்றமில்லை. 

அத்துடன் இங்கு நேர்மையாக பணியாற்றும் சில காவலர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆதிக்கம் செலுத்தும் விதமாக நடந்து கட்டப்பஞ்சாயத்து செய்து நிறைய பணம் சம்பாதித்து வருகின்றனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukkal thandikudi police station peoples unhappy with action


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->