ஜெய்பீம் கதை திருடிய வழக்கு.."3 மாதங்கள் தான் டைம்".. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மணிகண்டன், லிஜோ மோல், ரெஜிஷா விஜயன் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் 1990ம் ஆண்டுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது..

சூரியா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் சார்பில் தயாரித்திருந்த இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக வன்னியர்களை இப்படத்தில் இழிவுபடுத்தியதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தின் கதை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் எனவும், அதை திருடி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்துவிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகர் நடுவர் நீதிமன்றத்தில் குளஞ்சியப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. 

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று நடைபெற்ற விசாரணை முடிவில் ஜெய் பீம் படம் காப்பூர்மை தொடர்பாக இயக்குனர் ராஜாவுக்கு எதிரான வழக்கில் 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court ordered final report filed within 3months in Jai Bheem film case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->