ஃபாரின் ரேஞ்சுக்கு மாறப்போகுது - மகிழ்ச்சியில் கொங்கு மண்டல பெண்கள் - நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


கோவையில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு நேரிடும் பாலியல் தொல்லைகளை தவிர்க்கும் வகையில், பல்வேறு புதிய விதிமுறைகளை தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தென்னிந்திய பஞ்சாலை சங்கம் (சைமா) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கோவையில் மகளிர் நல ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள டெக்ஸ்டைல் மில்களில் 75 சதவிகிதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், மகளிர் நல ஆணையத்தின் மூலம் பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பாதுகாப்பிற்காக நல ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2010-ம் ஆண்டு வகுக்கப்பட்ட டெக்ஸ்டைல் ஆலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சைமா பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

குறிப்பாக, பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான தமிழக விடுதிகள் சட்டம் உள்ளிட்ட புதியசட்டங்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள அனைத்து டெக்ஸ்டைல் ஆலைகளில் சைமா மற்றும் மகளிர்நல ஆணையம் இணைந்து ஏற்படுத்த உள்ளது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனத்தில் புகார் குழு அமைக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

நிறுவனத்தில் பெண் தொழிலாளர்களுக்கு பணியாளர்கள் அளிக்கும் புகாரைப் பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணிபுரியும் இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பதிவு செய்ய பெண்களுக்கு கற்பித்து வருகிறோம்.

பெண் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதமாகவும், உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும்கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

மேலும், பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஷ்டிடியூட் உடன் சைமா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பணிபுரியும் இடத்தின்நிலை, சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore womens get safe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->