சென்னை வாசிகளுக்கு சிறப்பான ஒரு செய்தி.! அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில தகவல் ஆணையம்.!  - Seithipunal
Seithipunal


போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்காக, சென்னை வாசிகளுக்கு தனியாக ஒரு இணைய தளத்தை உருவாக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் இருசக்கர வாகனங்களின் அதிகரிப்பால் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னையின் இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலங்கள் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இது மட்டுமல்லாமல் இந்த போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது. 

எவ்வளவுதான் பொது போக்குவரத்துக்கு மக்களை கொண்டுவர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை வாங்குவதில் தான் குறியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அது குறித்த புகார்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், இணையதளம் ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த இணையதளத்தில் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் தடையின்றி இடதுபுறம் திரும்பக் கூடிய வழிகள் இடம் பெற வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI Traffic issue jan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->