வேட்பாளார் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனை செய்த அதிகாரி சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் காலம் சூடுபிடித்துள்ளது. மேலும், நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச்சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தனர். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா என்பவர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக பரிசோதிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் புகாரளித்தனர்.

அந்தப் புகாரின் படி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா, முறையாக வாகனப் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி கீதாவை இன்று பணியிடை நீக்கம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

candidate a rasa vehicle checking squad suspend


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->