அழிந்து வரும் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சியை காக்க வனத்துறை அதிகாரிகள் எடுத்த முடிவு!! - Seithipunal
Seithipunal


சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் பட்டாம்பூச்சி, பறவைகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு பணி நேற்று முன் தினம் முதல் தொடங்கியது. 

தமிழகத்தில் பட்டாம்பூச்சி  மற்றும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அடுத்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்துக்கு  உட்பட்ட டி.என் பாளையம், வனப்பகுதிகளில் உள்ள பட்டாம்பூச்சி  மற்றும் பறவைகள்  கணக்கெடுப்பு பணி நேற்றுமுன் தினம் முதல் தொடங்கியது.

இதற்காக, வனத்துறை சார்பில், வனச்சரகர், வனக்காப்பாளர், வனவர், வேட்டைத்தடுப்பு காவலர்கள்  மற்றும் தமிழ்நாடு வண்ணத்துப்பூச்சி சங்கம் அடங்கிய குழுவினர் இரண்டு நாட்கள் கணக்கெடுக்க உள்ளனர்.  

குறிப்பாக நவக்கிணறு மாதைய்யன் கோவில், குண்டேரிப்பள்ளம் அணை வளாகம், கடம்பூர், மாக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில், தினமும், காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணி வரை கணக்கெடுப்பு செய்கின்றனர். தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பறவை மற்றும் பட்டாம்பூச்சிகளின் வாழ்வியல் சூழ்நிலைகளை, வனக்குழுவினர் அறியவே, இந்த கணக்கெடுப்பு நடத்துவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Butterfly, birds in the forest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->