ஒற்றை உயிரை பலிவாங்கி.! 40 பேரை அந்தரத்தில் தொங்கவிட்ட பேருந்து.! ஈரோடு அருகே பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து. தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த வாலிபர்.

இன்று (16.07.2018) காலை ஈரோட்டில் இருந்து திருப்பூரை நோக்கி 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள மேம்பாலத்தில் அந்த பேருந்து வந்த போது, அதிவேகம் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.

வேகமாக மோதிய அடுத்த நொடி அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த சஞ்சீவ்நாதன் (வயது 27) பாலத்தின் மேலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட அவர் பாலத்திற்கு கீழ் இருந்த மின்கம்பியில் மோதி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்தில் பேருந்து மேம்பாலத்தின் மீது மோதியதில், முன்பாதி பாலத்திற்கு வெளியே தொங்கியபடி அந்தரத்தில் நின்றது. விபத்து ஏற்பட்டவுடன் தனியார் பேருந்தின் ஓட்டுனரும். நடத்துனரும் தப்பி ஓடிவிட்டனர். பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BUS ACCIDENT IN ERODE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->