அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - திருப்பூரில் பட்டப்பகலில் கேட்ட அபாய ஒலி : கதிகலங்க விட்ட திக் திக் நிமிடங்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர், ரயில்நிலைய வளாகத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்கள் செல்லக்கூடிய பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமும் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வரை வந்து செல்லக்கூடிய இடமாக திருப்பூர் ரயில்நிலையம் உள்ளது.

இந்நிலையில், திருப்பூர் ரயில்நிலையத்தின் முன்பதிவு வளாகம் அருகில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் உள்ளது.

இதில், காலை சுமார் 11 மணியளவில் திடீரென அலாரம் சத்தம் ஒலித்தது. இதனால், ஏடிஎம் அருகில் இருந்த ரயில் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த அலாரம் சத்தம் சுமார் ஒரு மணி நேரம் ஒலித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் ஏடிஎம் உள்ளே சென்று சோதனை செய்தனர்.

ஆனால், ஏடிஎம்மில் கொள்ளைக்கான முயற்சி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஏடிஎம் இயந்திரம் குறித்து தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில், ஏடிஎம் இயந்திரம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தான் அலாரம் ஒலித்தது என கண்டுபிடிக்கப்பட்டு அவை சரி செய்யப்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATM-money-robbery-police-inquiry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->