சரக்கு ரெயிலில் திடீர் கரும்புகை: பற்றி எரிந்த நிலக்கரி! அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


அரக்கோணம், கும்மிடிப்பூண்டி-சேலம் அணுமின் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு சரக்கு ரயில் ஒன்று நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

திருவள்ளூர் ரயில் நிலையத்தை சரக்கு ரயில் கடந்த போது கடைசி பெட்டியில் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்த திருவள்ளூர் ரயில் நிலைய போலீசார் உடனடியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதனை அடுத்து அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் சரக்கு ரயிலை ஆறாவது பிளாட்ஃபாரத்தில் அனுமதித்து ரயிலின் கடைசி பெட்டியில் சோதனை செய்த போது பெட்டியின் அடிப்பகுதியில் நிலக்கரி தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. 

பின்னர் ஒரு பெட்டி மட்டும் தனியாக துண்டித்து உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தினால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நிலக்கரியில் பற்றி எரிந்த தீயை கவனிக்காமல் இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் நிலக்கரி அழுத்தம் காரணமா வேறு ஏதாவது காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arakkonam railway station cargo train coal fire


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->