நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கூட்டத்தை கூட்டியது அமமுக!! அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லும் தினகரன்!! அமைதியாக இருக்கும் பிற கட்சிகள்!!  - Seithipunal
Seithipunal


கருர், ஐவஹர் பஜாரில் இன்று அமமுகவினர் சார்பில் பொதுகுழுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டம் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டத்தின் துவக்கமாக தொண்டர்களால் பார்க்கப்படுகிறது. 

கரூரில் நடந்த இந்த பொழுகுழுக்கூட்டத்திற்கு, மாவட்ட கழகத்தை சேர்ந்த PSNதங்கவேல் என்பவர் தலைமை தங்கியுள்ளார். இதில், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் A.நாகராஜன், அவைத் தலைவர் ஆரியூர் சுப்பிரமணியன், மாநில அம்மா பேரவை தலைவர் சாகுல் ஹமீது, மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் தியாகராஜன், பள்ளப்பட்டி நகரம் செயலாளர் சுல்தான் சுல்தாப்பா மற்றும் 

கழக ஊராட்சி, பேரூர், ஒன்றிய நிர்வாகிகளும், மகளிரணியினரும், தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு நடந்த இந்த கூட்டத்தில் வரும் மே மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலின் ஆலோசனை கூட்டத்திற்கு இது ஒரு முன்னோடியாக பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே, நடக்கவிருந்த திருவாரூர் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கி தினகரன் கட்சியினர் நகர்வதாக தெரிகிறது. மேலும், தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் அடுத்து மிகப்பெரிய ஆளுமையாக தஞ்சை, கும்பகோணம், திருவாரூரில் பார்க்கப்படும் எஸ்.காமராஜ் அவர்களும் இந்த நிகழ்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.                  


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk meeting in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->