விபத்து பலி நடைபெற்ற ஓராண்டுக்குள், மீண்டும், போடி மலையில் மீண்டும் பயங்கர காட்டுத் தீ…! யாருடைய சதி…? - Seithipunal
Seithipunal


 

தேனி மாவட்டம் போடி மலையில் உள்ள குரங்கனியில், கடந்த கோடை கால விடுமுறையில், டிரக்கிங் சென்றவர்கள், காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டு, உயிர் இழுந்த சம்பவம், இன்னும் மாறாத வடுவாக உள்ளது.

போடிக்கு அருகில் உள்ள மரக்கா மலையில், ஆரஞ்சு, காபி போன்ற பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. இந்தப் பயிர்கள் நுாற்றுக் கணக்கான ஏக்கரில் இந்த மலையில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மரக்கா மலையில், திடீரென்று காட்டுத் தீ பரவி வருகிறது. கோடை காலத்தில், ஏற்படும் வெப்ப உரசிலினால், தீ விபத்து ஏற்படும், என்று கருதப் படுவதுண்டு. ஆனால், இந்தக் குளிர் காலத்தில், எப்படி இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டது? என்பது குறித்து, வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

யாரும், கரிக்கட்டைக்காக, இந்தத் தீயை வைத்தார்களா? என்ன காரணம்? என்பதையும், வனத் துறையினர் துல்லியமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again forest fire in Bodi hill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->