வெள்ளக்காடாகிறது காவிரி.. சற்று முன்னர் 80,000 கனஅடி ஒரே நேரத்தில் திறப்பு: - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 79,730 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 27,000 கனஅடியாக உள்ளது. எனவே 27,000 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட காவிரி பாயும் 12 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் எந்நேரமும் மீட்புப் பணிகளுக்கு தயாராக இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் போலீஸார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் காவிரி கரையோர கிராமங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி கரையோரங்களில் வசித்து வந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after-5-years-the-mettur-dam-reached


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->