#BigBreaking | பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அதிமுகவின் பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுடைய 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அதே நிலைப்பாட்டில் தான் தற்போது நீடிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக் கூடாது என்று அதிமுக தரப்பில் வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொதுசிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Rsistance Uniform Civil Code


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->