அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்த கட்சி!! அதிர்ச்சியில் தமிழக கட்சிகள்!!  - Seithipunal
Seithipunal


கோவை விமான நிலையத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் ஆனா கமல்ஹாசன் வந்தபோது, செய்தியாளர்களிடம், "மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் நிச்சயம் கூட்டணி வைக்காது. நாம் மக்களுக்கு நல்லதை பகிரும் போது கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

அவசரமாக கைகுலுக்கல் செய்து கைகளை அழுக்காக்க கூடாது என நினைக்கிறோம். அதிமுகவுடன் கூட்டணியா என நினைக்க வேண்டாம். நான் கட்சி ஆரம்பிக்கும் முன்பிருந்தே அதிமுகவை எதிர்க்கிறேன். எனவே எதனுடனும் கூட்டணி கிடையாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். 

இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசுவது புதிதாக தோன்றவில்லை. இது அவரது வழக்கம். ஆனால், இஸ்லாமிய திருமணத்தில் சென்று இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசியிருக்க தேவையில்லை என நினைக்கிறேன் எனவும், 

ஒருவேளை அமமுகவுடன் கூட்டணி இருக்குமோ என நினைத்தால், அதுவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவீர்களா? என செய்தியாளர் கேட்டமைக்கு, விரைவில் அறிவிக்கப்படும் அதை நோக்கி தன் எங்கள் பயணம் இருக்கிறது" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk, dmk may be declined by the party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->