இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நேர்மையை பாராட்டி,. அவரின் கல்வி செலவை நடிகர் ரஜினியே ஏற்றார்!. - Seithipunal
Seithipunal



ஈரோடு மாவட்டம் கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மகன் முகமது யாசின், அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை போலீசிடரிடம் ஒப்படைத்ததுடன், தனக்கு உதவிகள் ஏதும் வேண்டாம் என்றும், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து யாசினின் விருப்பம், ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக ரஜினிகாந்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், நடிகர் ரஜினிகாந்தும் அதற்கு சம்மதித்தார்.

பின்னர், யாசின் தனது குடும்பத்தினருடன் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில்,யாசினின் செயல் பாராட்டுக்குரியது.

அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எதிர்காலத்தில் அவர் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரே, அதற்கு உதவி செய்வேன். யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

வருகிற 19-ந் தேதி மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தி அவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Rajinikanth appriciate second standers student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->