மாற்று திறனாளிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!! உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பியுங்கள்!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி உபகரணங்கள் பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு பின்வரும் தகுதிகள் உள்ளவர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தகுதிகள்: 

  • பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
  • மாற்றுத்திறனாளிகள் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெற 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
  • இதற்கு மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இது வரை அரசு துறைகளில் தையல் எந்திரம் மற்றும் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்  பெறாதவராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற ஆண் மாற்றுத்திறனாளிகள் 60 வயதிற்கு மிகாமலும், பெண் மாற்றுத்திறனாளிகள் 55 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
  • கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய- மாநில அரசுகளில் பணிபுரியும் மேற்கண்ட வகையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும்.

உபகரணங்கள் பற்றிய விவரங்கள்: 

  • இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் இதேபோல் 2 கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
  • தசை சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 கால்களும், 2 கைகளும் செயலிழந்தவர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

தேவையான நகல்கள்: 

  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், 
  • குடும்ப அட்டை நகல், 
  • கல்வி சான்றிதழ் நகல்,
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, 
  • பணிபுரிபவர்களாக இருந்தால் பணிச்சான்று.

மேலும், விவரங்களுக்கு 04328-225474 என்ற மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a scheme for handicapped poeples in perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->