போலீசாரின் மன உளைச்சலைப் போக்க, தரமணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேற் கொண்ட செயல்….! குவிந்து வரும் பாராட்டுக்கள்…! - Seithipunal
Seithipunal


 

கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக, தினசரி செய்திகளில், தமிழகத்தில் உள்ள போலீஸ்காரர் யாராவது தற்கொலை செய்வது, வேதனையான செய்தியாக இருந்தது.

அதிகமான பணிச்சுமை, எப்போதும் குற்றம், வழக்கு, கைதிகள், விசாரணை என்ற போக்கிலேயே இருப்பதால் தான் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. பணிச் சுமை அதிகரிக்க, அதிகரிக்க, இந்த மன உளைச்சல், மன அழுத்தமாக மாறி, அவர்களை நிலை தடுமாறச் செய்கிறது.

அதனால், அவர்கள் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளில், முற்றிலும், மன அமைதி இழக்கிறார்கள். இதனால் தான், தற்கொலை நிகழ்கிறது, என்று உளவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை தரமணி காவல் நிலையத்தில், துணை ஆய்வாளராகப் பணியாற்றும், பாஸ்கரன், தான் பணி புரிந்து வரும், தரமணி காவல் நிலையத்தை, பசுமை காவல் நிலையமாக மாற்றி உள்ளார்.

காவல் நிலைய வளாகத்தில், அழகிய வண்ணப் பூக்கள், அரிய வகை மூலிகைச் செடிகள், கீழாநெல்லி, ஆடா தொடை, உள்ளிட்ட, ஏராளமான மருத்துவக் குணம் வாய்ந்த செடிகளையும் பயிரிட்டு வளர்த்து வருகிறார்.

காவல் நிலையத்திற்குள் செல்லும் பாதையில், பச்சைப்புல் மேட் அமைத்திருக்கிறார். இதனால், காவல் நிலையத்திற்குள் நுழையும் போதே, காவலர்களின் மன நிலை, அமைதியாக மாறி விடுகிறது.

அதற்கான அழகிய சுற்றுப் புறமும், சுத்தமும் சுகாதரமாக இருப்பதால், இந்தப் பசுமைக் காவல் நிலையத்தைக் கண்டு ரசித்த, காவல் உயர் அதிகாரிகள், பாஸ்கரனை வெகுவாகப் பாராட்டினர். இதே போல், அனைத்து காவல் நிலையங்களும் மாறினால், நன்றாக இருக்கும், என்றும் ஆலோசனை கூறினர்.

பொது மக்களும், இந்தக் காவல் நிலையத்தை, ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a role model police in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->