புழல் சிறைக்குள், கைதிகளிடம் புழங்கும் செல்போன், கஞ்சா…! எல்லாவற்றுக்கும் விலை உண்டு…! போட்டுக் கொடுத்த காவலர்கள்….! மிரட்டும் கைதிகள்…! பரபரப்பான செய்தி….! - Seithipunal
Seithipunal


 

சென்னை மத்திய புழல் சிறையில், பணியாற்றும் 25-க்கும் அதிகமான சிறைக்  காவலர்கள், கூட்டாகச் சேர்ந்து, தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு, ஒரு அதிர்ச்சியான கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதில், சிறையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கைதிகளுக்குச் செய்யும் சலுகைகள் பற்றி விரிவாக எழுதி உள்ளனர்.

ஒரு கைதிக்கு, சிறையில் செல்போன், கஞ்சா, அறு சுவையான அசைவ உணவு வேண்டுமென்றால், முதலில் 2 லட்ச ரூபாயை, சிறைக் கண்காணிப்பளரிடம் நெருக்கமாக இருக்கும், காவலரிடம் கொடுக்க வேண்டும்.

அந்தத் தொகையை, அந்தக் காவலர் சிறைக் கண்காணிப்பாளரிடம் நேரடியாகக் கொடுத்து விடுவார். பின், வேண்டப்பட்ட கைதிக்கு வேண்டிய வசதிகள், சிறையில் கிடைக்கிறது.

குறிப்பாக, ஒன்றாம் சிறை முதல் பிரிவில், தீவிரவாதிகள், கொலை வழக்கு, போதை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் உள்ளனர். இந்தக் கைதிகளின் பிரிவில் தான், அனைத்து சட்ட விரோத செயல்களும் நடைபெறுகின்றன.

இங்குள்ள கைதிகள், பணத்தைக் கொடுத்து விட்டு, செல்போன் மூலம் சிறையில் இருந்தபடியே, வெளியே நடக்கும், தங்களது வியாபாரத்தை தடங்கல் இன்றி நடத்துகின்றனர்.

விசாரணை கைதிகள் அதிகம் உள்ள 4,5 பிரிவுகளில், பிரபலமான ரவுடிகளும், திருட்டுக் குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு, குறிப்பாக இரண்டு காவலர்கள், கஞ்சா, செல்போன் ஆகியவற்றை, சிறை மதில் சுவற்றில் இருந்து வீசி எரிகின்றனர்.

அதற்கு, சன்மானமாக, அந்தக் காவலர்களுக்கு, மது மற்றும் விலை மாதர்களை சப்ளை செய்யும் வேலையும் நடக்கிறது.

இது பற்றி எல்லாம் விரிவாக, ஆதாரங்களுடன், சிறை கண்காணிப்பாளரிடம் புகார் கூறினோம். ஆனால் அவர், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றும், இதையெல்லாம், டி.ஐ.ஜி. தான் பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறி விட்டார்.

இதனை மோப்பம் பிடித்த கைதிகள், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, எங்களை டிரான்ஸ்பர் செய்து விடுவதாக சிறையிலேயே மிரட்டுகின்றனர். இதனைக் கண்காணித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், என்று அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

இந்தக் கடிதம் தற்போது, சிறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a letter to D.I.G. from the police men


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->