இன்று அமாவாசை தினத்தில், சதுரகிரி மலைக்குச் செல்லும் 55 செக் குடியரசு நாட்டினர்….. - Seithipunal
Seithipunal


!

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில், உள்ள மகாலிங்கம் கோவிலில் இன்று, அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 55 பேர் மாலை அணிந்து வந்துள்ளனர். இவர்களில் 33 பேர் பெண்கள், 22 ஆண்களும் உள்ளனர். இந்தக் குழுவின் தலைவர், தாமஸ் பைப்பர் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக, இந்தியாவிற்கு வந்து செல்கிறேன்.

இந்த 50 ஆண்டுகளும் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். என் குடும்பத்தினரையும், ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி இருக்கிறேன். நாங்கள் வந்த இந்த குழுவில், 42 பேர் மாலை போட்டு விரதம் இருந்து வருகிறோம்.

சதுரகிரி மலையில், சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, சபரிமலைக்குச் செல்ல உள்ளோம். எங்கள் குழுவில் உள்ள பெண்களை அனுமதிப்பார்களா? என்று தெரியவில்லை”, என்று அவர் கூறினார்.

பின்னர், அவர்கள், “அரோகரா” கோஷத்துடன் சதுரகிரி மலையில் நடந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55 Chek country people visiting in Sadhuragiri hill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->