மாநகராட்சி ஆணையர் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் நிர்வாக காரணங்களுக்காக நேற்று பல்வேறு துறைகளில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர்கள் புதிதாக நியமிக்கப்பட்டும் சிலர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஆவடி கோவை மதுரை நெல்லை மாநகராட்சி ஆணையர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். 

1) ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த தர்பகராஜ் உயர்கல்வி துறையின் துணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2) ஆவடி மாநகராட்சி ஆணையராக சென்னை பெருநகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

3) மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் சென்னை பெருநகர் மத்திய மண்டல துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4) மதுரை மாநகராட்சியின் ஆணையராக கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஆணழகன் பணியாற்றி வந்த மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

5) திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சிவ கிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6) சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் வடக்கு மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்த சிவகுரு பிரபாகரன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

7) தூத்துக்குடி ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையாக பணியாற்றி வந்த தாக்கரே சுபம் தன்யன்ராவ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8) திண்டிவனம் துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பிரதாப் நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

10) பொள்ளாச்சி துணை ஆணையர் ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியங்கா திருவாரூர் மாவட்ட வளர்ச்சி குழுமத்தில் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11) ஓசூர் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 IAS officers including Corporation Commissioner transferred


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->