மூன்று வேளையும் நான் இதைத் தான் சாப்பிடுவேன்: தனது ஃபிட்னஸ் ரகசியத்தை வெளியே சொன்ன விராட் கோலி! - Seithipunal
Seithipunal


தனது ஃபிட்னஸ் ரகசியம் பற்றி இந்திய அணியின் கேப்டன்  கோலி மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்து, மிகவும் ஃபிட்டாக இருப்பவர் கேப்டன் விராட் கோலி. 

அதுமட்டும் இல்லாமல், உலக அளவில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் மிகவும் கட்டுக்கோப்பாக தனது உடல்நிலையை வைத்திருக்கும் வெகு சில வீரர்களில் கோலியும் ஒருவர்.

ஒரு காலத்தில், இந்திய அணியின் அதிரடி மன்னனாக விளங்கிய யுவராஜ் சிங், தற்போது அணியில் இடம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் அவரது மோசமான ஃபிட்னஸ் தான் என்று கூறப்படுகிறது.

அவரோடு, இந்திய அணியில் நட்சத்திரமாக ஜொலித்த சுரேஷ் ரெய்னாவும், தனது ஃபிட்னஸ் மீது அக்கறை செலுத்தாத காரணத்தினால்தான் அணியில் இடம் பெற முடியவில்லை.

அதிரடி மன்னன் தோனியால் 36 வயதில் கூட, இன்றும் மின்னல் வேகத்தில் ரன்கள் எடுக்க ஓட முடிகிறது என்றால், அந்த அளவிற்கு அவர் உடலை கட்டுக்கோப்பாக  வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

தான் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குறித்து கோலி தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கோலியின் காலை உணவு (Break  fast):

முட்டைகளின் வெள்ளைக் கருவால் உருவாக்கப்பட்ட ஆம்லெட் மற்றும் ஒரு வேகவைத்த முட்டை.

அதனோடு, சில கீரைகள், பிளாக் பெப்பர் மற்றும் சீஸ். மேலும், கிரில்டு பாகோன்(அ) ஸ்மோக்டு சால்மன், பப்பாயா, டிராகன் ஃப்ரூட் (அ) வாட்டர் மெலன் மிக்ஸ் செய்த கலவை. இறுதியாக லெமன் கலந்த கிரீன் டீ.

மதிய உணவு (Lunch): 

மதிய உணவாக, உருளைக்கிழங்கு, க்ரில்டு சிக்கன், கீரை, காய்கறிகள் போன்றவற்றை எடுத்து கொள்வாராம்.

இரவு உணவு (Dinnar ):  

இரவு நேரங்களில் கடல் உணவுகள் மட்டுமே.. அதுவும் குறைந்த அளவுதான்… இரவு நேரத்தில் எப்போதும் லைட்டாக இருக்க வேண்டும் என்பது கோலியின் ஸ்ட்ரிக்டான அட்வைஸ் ஆகும்.

(அட போங்க..... நாலு இட்லிய சாப்டா பிரேக்ஃபாஸ்ட் முடிஞ்சிடப்போகுது.. என்று  நினைக்குற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேட்குது...!)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian captain Virat Kohli has opened up his fitness secret.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->