இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி 'டிராவில்' முடிந்தது! விராட் கோலி அபார பந்து வீச்சு! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையேயான நான்கு நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வந்தது. இப்போட்டியில், முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. இதில்,  புஜாரா, விராட் கோலி, ரஹானே, விஹாரி, ப்ரித்வி ஷா ஆகிய ஐந்து பேர் அரை சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் முதலில் களமிறங்கி 3 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி மிகவும் அகோரசமாக விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய அணி தரப்பில் இருந்து 10 பேர் பவுலிங் செய்தனர். அதில் விராட் கோலியும் அடங்குவார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 544 ரன்கள் எடுத்தது. டியர்லி ஷார்ட், ப்ரியன்ட், ஹார்டி ஆகியோர் அரைசதம் அடித்தனர். சதம் அடித்த நீள்சனை, விராட் கோலி அவுட் செய்தார்.

இந்திய அணியில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் இரண்டு விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, பும்ரா, விராட் கோலி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆடிய ப்ரித்வி ஷா காயம் காரணமாக விளையாடவில்லை. இரண்டாவது இன்னிங்சில் அவருக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டார். தொடக்க வீரர்களாக முரளி விஜய், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

முதல் இன்னிங்சில் ஆட வாய்ப்பு கொடுக்காததற்கு, இந்த இன்னிங்சில் முரளி விஜய் அடித்து விளாசினார். அவர் 132 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். கே.எல் ராகுல் 62 ரன்கள் அடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி  211 ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Test match ends in Australia Virat Kohli's fine bowling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->