ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா கேப்டன் விலகல்.. புதிய கேப்டன் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. 

இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தடைந்து. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில், முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 17ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இதனிடையே கம்மின்ஸ் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார்.

 இதில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸின் தாயார் காலமானார். இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Steven Smith captain of Australia ODI series against India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->