சிக்ஸர் சர்மா! ரோஹித் ஷர்மாவின் ருத்திரதாண்டவம்! அலறும் ஆஸ்திரேலியா! வியக்க வைக்கும் சாதனைகள்!  - Seithipunal
Seithipunal


சிட்னியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது அனைவருக்கும் ஆறுதலாக அமைந்தது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம்   ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.  ஆனால் நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது துரதிஷ்ட்டம். மேலும் வங்கதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இதுவரை மொத்தம் அடித்துள்ளது 208 சிக்சர்கள் ஆனால் ஆஸ்திரேலியவுக்கு எதிராக மட்டும் 64 சிக்சர்கள் விளாசியுள்ளார் ரோஹித். நேற்றைய போட்டியில் ஆடிய ரோஹித் நீங்களான இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மொத்தமாக அடித்துள்ளது 52 சிக்ஸர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா ஆஸ்திரேலியா தொடர்களில் சச்சின், பான்டிங்க்கு பிறகு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த கில்க்ரிஸ்ட் சாதனையை முறியடித்து ரோஹித் இந்த சாதனையை செய்துள்ளார். இந்த போட்டி தொடர் மட்டும் இல்லாது விரைவில் இந்தியாவில் 5 போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் இருப்பதால் பாண்டிங்கையும் முந்தினாலும் ஆச்சர்யம் இல்லை. 

ரோஹித் சர்மா 2017 சாம்பியன்ஸ் ட்ரோபி முதல் இந்த தொடர் வரை இறுதியாக விளையாடிய பத்து ஒருநாள் தொடர்களிலும் சதமடித்து அசத்தியுள்ளார். மேலும் 2015 இல் இருந்து ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளில்  சர்வதேச அளவில் அதிகளவில் சதங்களை அடித்தவர் (21 சதங்கள்) என்ற பெருமையும் அவரையே சேருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma records against australia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->