பெங்களூரு அணி மூட்டையை கட்ட வேண்டியது தான்!! பெங்களூரை பதறவைத்த பஞ்சாப்!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 27வது லீக் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் 2 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடித்து 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சாகல் ஓவரில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆகினார்.

அதனையடுத்து களமிறங்கிய மயங் அகர்வால் 1 பவுண்டரியும், 1 சிக்சரும் அடித்து 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து சாகல் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். அதனையடுத்து களமிறங்கிய ஸர்ப்ராஸ் கான் 1 பவுண்டரியும், 1 சிக்சரும் அடித்து  13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து சிராஜ் ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அதனையயடுத்து களமிறங்கிய கர்ரன் 3 பந்துகளில் 1 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். துவக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி 10 பவுண்டரிகளும்,8 சிக்சரும் அடித்து  64 பந்துகளை சந்தித்து 99 ரன்கள் எடுத்தார். கடைசியாக களமிறங்கிய மந்தீப் சிங் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்துள்ளது. இந்த ரன் பெங்களூரு அணிக்கு கடினமான இலக்காக இருக்கும் என கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RCB Vs KXIP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->