பயிற்சி ஆட்டத்திற்கே ரசிகர்கள் கூட்டம் நிரம்பிய சேப்பாக்கம் மைதானம்! பொங்கி எழும் சிஎஸ்கே ஆர்மி!! - Seithipunal
Seithipunal



2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான 'நடப்பு சாம்பியன்' சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது. 

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 16 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. அந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு நள்ளிரவு முதலே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கவுன்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்.

பொதுவாக வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் போது மைதானத்திற்கு ரசிகர்கள் இருப்பது குறைவாக தான் இருக்கும். நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதை பார்க்கவே ரசிகர்கள் கூடி மைதானமே நிரம்பியது. 

பயிற்சி ஆட்டத்திற்கே அதிக அளவில் கூட்டம் கூடியதால், 23ம் தேதி நடைபெறும் சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் ஆடும் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

practice match crowd in chepauk stadium


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->