ஆசிய குத்துச்சண்டை போட்டி : வடகொரிய வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றார் மேரி கோம்..!! - Seithipunal
Seithipunal


வியட்நாமில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்சிப் இறுதி போட்டியில் வடகொரிய வீராங்கனையை தோற்கடித்து இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றுள்ளார்.

48 கிலோ எடைப்பிரிவுக்கான பெண்கள் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை சுபாசா கோமுரா-வை எதிர்த்து 5 : 0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு மேரி கோம் முன்னேறினார்.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், 5 : 0 என்ற கணக்கில் வடகொரிய வீராங்கனை கிம் கியாங் மி-யை மேரி கோம் தோற்கடித்தார்.

இந்த போட்டியின் வெற்றி மூலம் அவர் ஆசிய கோப்பை சாம்பியன் போட்டியில் 5 முறை தங்கமும், ஒருமுறை வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.

பதக்கங்களை குவித்து வரும் மேரி கோம், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mary Kom beats North Korea Boxer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->