இந்திய அணியின் நிர்வாகம் மீது பாய்ச்சல்.! பிரபல கிரிக்கெட் வீரர் ஆவேசம்.!! அணி நிர்வாகம் இவ்வாறு செய்வது முறையல்ல!!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதில் ஒருநாள் தொடரில் சொதப்பிய ஒரு சில வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த சூழ்நிலையில், இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் 4 வதாக எந்த வீரரை களமிறக்குவது என்ற பிரச்னை கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வது அணிக்கு நல்லதல்ல என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எச்சரித்துள்ளார்.

கே.எல்.ராகுலை 4 வதாக களமிறக்க வேண்டும் என்பதே கங்குலி, லட்சுமண் போன்ற முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 4 வதாக களமிறக்கப்பட்ட ராகுலை நீக்கி, மூன்றாவது போட்டியில் அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்கினார். அணி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு லட்சுமண் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முன்னாள் கேப்டன் கங்குலி, கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், இதுகுறித்து பேசிய கங்குலி, இந்திய அணியின் 4 வது வீரராக ராகுல் நிரந்தரமாக களமிறக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த 4 வது வரிசை வீரருக்கான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக ராகுல் இருப்பார். அவரை தொடர்ந்து அந்த இடத்தில் களமிறக்க வேண்டும். அப்போதுதான், அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவ்வாறு செய்யாமல் அடிக்கடி வீரர்களை மாற்றி களமிறக்குதால் அணிக்கு பின்னடைவு ஏற்படும் எனவும் கங்குலி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian former cricket captain interview


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->