100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா! - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் விளையாடி ஆறிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் சேசிங் செய்து வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யவே விருப்பமாக இருந்தது. 

அவர்கள் விருப்பத்தின் படி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமேஅதிர்ச்சி காத்திருந்தது. கில் விராட் கோலி ஸ்ரேயாஸ் அய்யர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி நிலை குலைந்து போனது. ரோஹித் ராகுல் பார்ட்னர்ஷிப் சிறப்பாக சென்ற வேளையில் லோகேஷ் ராகுல் 39 ரன்களில் ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 49 ரன்களில் ஆட்டம் இழந்தார். கடைசி வரை போராடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரகளை மட்டுமே எடுத்து. 230 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, முதல் இரண்டு ஓவர் மட்டுமே சிறப்பாக அமைந்தது. அதன் பிறகு பும்ரா மற்றும் ஷமியின் அசுரவேக தாக்குதலில் முதல் பத்து ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததது. இறுதிவரை போராடி பார்த்த அந்த அணியை யாராலும் மீட்கவே முடியவில்லை. 

129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் 35 வது ஓவருக்குள்ளாகவே இழந்துவிட்டனர். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடஜா ஒரு விக்கட்டும் கைப்பற்றினார்கள். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆக வந்த இங்கிலாந்து அணி தொடரில் இருந்து இவ்வளவு விரைவாக வெளியேறும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the match against england and move the top of the table


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->