வெடித்து சிதறியது இந்திய அணி.. தெறித்து விழுந்த வெஸ்ட்இண்டீஸ் - முடிந்தது சோலி.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இருபது ஓவர் தொடரையும் இந்தியாவே வென்றது.

முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது டி20 லக்னோவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களத்தில் இறங்கிய ரோஹித் - தவான் இணை 13 ஓவர் வரை நிலைத்து நின்று ஆடியது.

123 ரன் எடுத்த பொழுது இந்தியா தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கடைசி ஓவர் வரை அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா 61 பந்துகளில் 111 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இருபது ஓவர் போட்டி தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

அணித்தலைவராக ரோஹித் பொறுப்பேற்று இந்தியா வெற்றி பெறும் 6வது இருபது ஓவர் தொடர் இதுவாகும்.

மேலும் இது தொடர்ச்சியாக இந்திய அணி பெரும்  7-வது இருபது ஓவர் போட்டி வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

India won by 71 runs and clinch t20 series against west indies

செய்திகள்Seithipunal