நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் மைதானத்தில் எதிர்கொள்ளும் இந்திய அணி!
india vs new zealand final T20
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிதொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர்.
ஹாமில்டன் மைதானத்தில் இதுவரை எட்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் நியூசிலாந்து அணி 6-போட்டியில் வெற்றியும், 2-போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இன்று நடக்கும் போட்டி இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
india vs new zealand final T20