இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 12 பேர் மட்டும் கொண்ட இந்திய அணி அறிவிப்பு - பிசிசிஐ! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.  இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 1947  ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. அதனை தற்போது, இந்திய அணி வீரர்கள் தகர்த்தெறிந்து சாதனை படைக்கும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தொடரில் மிகவும் அதிக கவனிக்கும் வகையில் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். அவர் இத்தொடரில் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. விராட் கோலியை வெளியேற்றவே ஆஸ்திரேலிய அணி புதிய வியூகங்களை எடுத்து வருகிறது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்றது. அனல் அந்த தொடரில் விராட் கோலி 692 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியளித்தார். தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.காயம் காரணமாக பிரித்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடவில்லை. மேலும் ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்) 
ரஹானே (துணை கேப்டன்) 
கேஎல் ராகுல் 
முரளி விஜய் 
செடேஸ்வர புஜாரா 
ரோகித் சர்மா 
ஹனுமா விஹாரி 
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) 
ரவிசந்திரன் அஸ்வின் 
முகமது சமி 
இஷாந்த் சர்மா 
ஜஸ்பிரிட் பும்ரா

இந்த 12 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியிலிருந்து எந்த ஒரு வீரர் நீக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதே போல் ஆஸ்திரேலிய அணியும் 12 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி:
மார்கஸ் ஹாரிஸ் 
ஆரோன் பிஞ்ச் 
உஸ்மான் கவாஜா 
ஷான் மார்ஷ் 
பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் 
டிராவிஸ் ஹெட் 
டிம் பெயின் (கேப்டன், கீப்பர்) 
பாட் கம்மின்ஸ் 
மிட்ச் ஸ்டார்க் 
நாதன் லியோன் 
ஜோஷ் ஹாஸ்லேவுட் (துணை கேப்டன்) 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India-Australia Test match: Debut of India to be announced by BCCI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->