கிரிக்கெட் போட்டியின் முக்கிய தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது கிரிக்கெட் வாரியம்.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் போட்டியில், முக்கிய தொடராக கருதப் படுவது, கிரிக்கெட் போட்டியை கண்டு பிடித்த இங்கிலாந்து அணிக்கும், கிரிக்கெட்டை தனது தேசிய விளையாட்டாக கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரே ஆகும். இந்த கிரிக்கெட் தொடருக்கு தான் அந்த இருநாட்டு ரசிகர்களும் நீண்ட நாட்களாக காத்திருப்பார்கள். 

மேலும், இப்போட்டி அந்த இரு நாட்டினருக்கும் விருந்தாக இருக்கும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி எவ்வாறு இருக்குமோ அதை விட பல மடங்கு அதிக ஆர்ப்பரிப்போடு நடக்கும். ஒரு டெஸ்ட் போட்டியை காண, பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்றால், அது ஆஷஸ் தொடரில் மட்டுமே சாத்தியமாகும்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடர், ஒருமுறை ஆஸ்திரேலியாவிலும், மறுமுறை இங்கிலாந்திலும் நடத்தப்படும். 2017-18  ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 4-0 என தொடரை வென்றது.

இந்நிலையில், 2019-ல் இருந்து ஐசிசி உலக சாம்பியன் டெஸ்ட் லீக் அறிமுகப் படுத்துகிறது. இதன் முதல் தொடராக இந்த ஆஷஸ் தொடர அமைகிறது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை- எட்ஜ்பாஸ்டன்
2-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை - லார்ட்ஸ்
3-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை - ஹெட்லிங்லே
4-வது டெஸ்ட் - செப்டம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ஓல்டு டிராஃப்போர்டு
5-வது மற்றும் கடைசி டெஸ்ட் - செப்டம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை - ஓவல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england cricket board launch ashes test match table


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->