தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத் தலைவராக அன்புமணி ராமதாஸ் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு இறகுப்பந்து (பேட்மின்டன்) சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (12.11.2017) நடைபெற்றது. இன்றைய பொதுக்குழுவில், தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சங்கத் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது முறையாக போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய இறகுபந்து சங்கத்தின் செயலாளர் திரு. புனியா சௌத்ரி அவர்களும், கர்நாடக இறகுப்பந்து சங்கத்தலைவர் திரு.N.C. சுதிர் அவர்களும், திரு. டேனியல் (SDAT) அவர்களும் தேர்தல் கண்கானிப்பாளர்களாக இருந்து தேர்தலை நடத்தினார்கள். 

பின்னர் தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சார்ந்த ஆண், பெண் இருபிரிவிலும் வாகையர் பட்டம் சூடியவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

பொதுக்குழுவில் பேசிய கர்நாடக மாநில இறகுபந்தாட்ட சங்கத்தின் தலைவர் N.C. சுதிர், இந்தியாவிலயே இதுபோன்று எந்த மாநிலத்திலும் பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுவதில்லை. 

ஆனால் தமிழகத்தில் அதிகளவில் நிதியினை ஒதுக்கி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸை பாராட்டினர். தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்தக்கொண்டார். 

பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ் தன்னை மீண்டும் தமிழ்நாடு இறகுபந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு அனைத்து மாநில, மாவட்ட சங்கபொருப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 

மேலும் தமிழக இறகுபந்தாட்ட வீரர்களை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் முதல் ஒலிம்பிக் போட்டி வரை பங்குபெற செய்து வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani elected as TNBA head


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->