இணையத்தில் வைரலாகும் தோனியின் பெற்றோர் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் லீக் முதல் போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை இன்று துவங்கவுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான 'நடப்பு சாம்பியன்' சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது. 

இப்போட்டிக்காக சென்னை அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் தல தோனி அவரது பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தோனி அவரது தாய், தந்தை உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni parents photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->