யார் இடத்துல வந்து, யார் சீன் போடுறது?? ஐதராபாத்தை ஓட.. ஓட.. விரட்டிய சிஎஸ்கே!! - Seithipunal
Seithipunal



ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனா சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சென்றது. இந்த சீசனின் 41 வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை அணியும் ஐதராபாத் அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி சிறப்பாக ஆடியது. ஐதராபாத் அணியின் துவக்க வீரர் வார்னர் 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

அதனையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்து 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் முதல் இரண்டு ஓவரை சொதப்பினாலும். அதனையடுத்து அதிரடியாக ஆடினர். சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். துவக்க வீரராக களமிறங்கிய வாட்சன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அவுட் ஆகி சதம் எடுக்க தவறினார்.

இதனையடுத்து சென்னை அணி கடைசி ஓவரின் 5 வது பந்தில் ஒரு ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிபெற்றது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk won SRH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->