தங்க மகனறிவோம்.. தங்க மகளை..? சீனமோ.. ஜப்பானோ என்று வாயை பிளந்தார்கள்: 2 மீட்டருக்கு அருகில் வாயை அடைத்த நிகழ்வு..? - Seithipunal
Seithipunal


2017க்கான ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் பி.யு.சித்ரா . பாலக்காட்டைச் சேர்ந்தவர்.

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டி தொடரில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், வீரர்கள் - வீராங்கனைகள் உள்நாட்டில் நடைபெறும் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

அண்மையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், கேரளாவைச் சேர்ந்த பி.யு. சித்ரா என்ற வீராங்கனை ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார்.

ஆனால், இந்திய தடகள கூட்டமைப்பு, பி.யு. சித்ராவை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

அன்று நடைபெற்ற போட்டியின் போது சீனமோ.. ஜப்பானோ.. இந்த நாட்டு வீராங்கனை மட்டுமே வெற்றி பெறுவாள் என்று நினைத்தனர்.

அவளை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அவளைப் பற்றி யாருமே பேசவும் இல்லை. நிகழ்வின் வர்ணனையாளரும்கூட அவளின் பெயரை 2 மீட்டருக்கருகில் வரும் வரையிலும் குறிப்பிடவில்லை.

அவள் வெளிப்புறப் பாதையிலிருந்து கட்டாயப்படுத்தி முன்னணிக்கு வரவழைக்கப்படுகிறாள்.

வெள்ளைக் கோட்டை தாண்டுகிறாள்.. உலகம் திரும்பிப் பார்க்கிறது. அந்தத் தங்கமகள்.. பாலக்காட்டிலிருக்கும் முண்டூர் கிராமத்தின் மூலையிலிருந்து 2017-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1500 மீட்டர் பந்தையத்தை வென்று வருகிறாள்.

அந்த வெற்றியைக் கொண்டாடக்கூட அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. இது போன்ற தங்கமகள்களை நாம் கொண்டாடுவோம்.

இந்தியாவில் திறமைகள் புறக்கணிக்கப்படுகின்றன. திரைமறைவு கைமாற்றதிலேயே வாய்ப்புகளின் வழி அமைகின்றது.

முத்துக்கள் சிற்பிக்குள் இருக்கும் வரை அது ஒரு ஓடாகவே கண்களுக்கு தெரியும். வெளியில் வந்து முகம் கட்டும் பொழுது தான் ஆபரணமாக மிளிரும்.

இங்கே முத்துக்குளிக்க ஆள் இல்லை. முத்தை தேடவும் மனமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chithra PU is an Indian track and field athlete from the state of Kerala.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->