பங்குனி உத்திரத்திற்கு இதனை சிறப்புகளா?! எவரும் அறியாத வரலாறும், சிறப்புகளும்!!  - Seithipunal
Seithipunal


முருகனுக்குரிய சிறப்பு விரத தினங்களில் ஒன்று பங்குனி உத்திரமாகும். கொண்டாடப்படுகிறது. முருகன் ஒரு சைவக்கடவுள். பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12 ம் மாதம் பங்குனி மாதம். 

அதேபோல் நட்சத்திரங்களில் 12 ம் நட்சத்திரம் உத்திரம் எனவே தான் 12 கைகளை உடைய முருகனுக்கு இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு மஹா உற்சவம் கொண்டாடுவது வழக்கம். 

சிவனுக்கு சோமசுந்தரர் என்றும், பார்வதிக்கு மீனாட்சி என்றும் நாமம்(பெயர்) கொடுத்து அவர்களுக்கு திருமணம் செய்த நாளும் பங்குனி உத்தர தினத்தில் தான். சிவனின் மோன நிலையை மன்மதன் கலைத்ததால் மன்மதனை சுவர் எரிக்க தேவர்கள் கலங்கி நின்றனர்.

எனவே, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு சிவன் தேவியை இந்த நாளில் மணந்தார் என்பது ஐதீகம். இத்தினத்தில், சிவனுக்கும் பார்வதிக்கும் அலங்காரம் செய்து வாத்தியங்கள் முழங்க மணவறையில் அமர்த்தி, 

வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

இத்தினத்தின் மேலும் சிறப்பு: 

இத்தினத்தில் தான் சிவன் பார்வதியை, மணந்தார். அருள்மிகு ராமன், சீதா தேவியை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய பல தெய்வ திருமணங்கள் பங்குனி உத்திரத்தில் தான் நடந்தது. 

எனவே தான் திருமணம் ஆகாத இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் போன்றவையும் நடக்கிறது. 

அசுரனை வீழ்த்திய நாள்: பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.

பங்குனி உத்தர கொண்டாட்டம்: 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

history of panguni uthiram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->