டிவிட்டரில் கோளாறு.. ஒப்புக்கொண்ட டிவிட்டர் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


லைக்ஸ் மற்றும் ரீட்வீட் எண்ணிக்கையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை டிவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. டிவிட்டரில் பதிவு செயப்படு டிவிட்டர்களுக்கு வரும் ரீடிவீட்டுகள்  மற்றும் லைக்ஸ்களின் எண்ணிக்கையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சில புகார்கள் எழுந்தது. 

இந்தக் கோளாறு ஏற்பட்டது உண்மைதான் என்று டிவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், கோளாறால் ஏற்பட்ட சிரமத்திற்காக பயனர்களிடம் டிவிட்டர் மன்னிப்பு கேட்டுள்ளது. 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பலரின் டிவிட்டர்களுக்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் ரீடிவீட்டுகளின் எண்ணிக்கை திடீரென அதிகமாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

இந்தியாவில், ஸ்ரீ ரவிசங்கரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் டிவிட்டரில் பதிவு செயப்படு டிவிட்டின், லைக்ஸ் மற்றும் ரீடிவீட்டுகளின் எண்ணிக்கை தாறுமாறாக ஏறுவதையும், இறங்குவதையும் கண்ட ஒருவர் அதை டிவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தார். இதேபோல உலகம் முழுவதும் பலரும் புகாரளித்ததையடுத்து டிவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவினர் பதிவிட்ட டிவிட்டில், உலகம் முழுவதும் சிலருக்கு நோட்டிஃபிகேஷன், லைக்ஸ் மற்றும் ரீடிவீட்டுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்று பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

like problem for twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->