பட்டாசு வெடிக்கவே நேரம் கொடுக்கல! இந்த விதிகள் யாருக்கு? தீயணைப்பு துறையின் வேடிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் என மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆனாலும், இதில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதில் இந்தியா முழுவதும் 2 மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு பட்டாசு வெடிக்க காலை 6-7 மற்றும் இரவு 7-8 நேரம் ஒதுக்கி இருந்தது.

தற்போது, தமிழ்நாட்டில் பல இடங்களில் விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக கூறி, பட்டாசு வெடிப்பவர்களை காவல்துறையினர் பல நபர்களை கைது மற்றும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் மக்களை பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அதில், 

1. பட்டாசு வெடிக்கும் போது நல்ல பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

2. பக்கெட்டுகளில் தண்ணீர் மற்றும் மணலை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்

3. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் உடனிருக்க வேண்டும்

4. மிக நீண்ட ஊதுபத்திகளை பிடித்து பட்டாசுகளை பற்ற வைக்க வேண்டும்

5. பாட்டில்கள், டப்பாக்கள், கொட்டாங்குச்சியில் வைத்து பட்டாசு வெடிகளை  வெடிக்க கூடாது.

6. மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், கியாஸ் கடைகள் இருக்கும் இடங்களில் அறவே பட்டாசு வெடிக்க கூடாது.

7. தீயில் ஏற்பட்ட புண்கள் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய துணியால் மூடி உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து குறித்து பலரும்,பட்டாசு வெடிக்க நேரமே இல்லை, பட்டாசு  வெடித்தாலும் காவல்துறையின் கைது வேறு, இந்த விதிமுறைகள் யாருக்கு என தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fireworks do not give time! To whom are these rules? Fun of the fire department!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->