‘பேஸ்புக்’ முடக்கபடுகிறதா..!?மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக சம்மன் - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ‘பேஸ்புக்’ பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் முகநூல் தொடர்பாக விவரங்கள் திருடப்பட்டது தொடர்பாக இங்கிலாந்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

முகநூல் மூலம் மக்களின் விவரங்களை திரட்டி அதன் மூலம் பல நாடுகளின் தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய மோசடியில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற அந்த நிறுவனம் அமெரிக்கா அதிபர் தேர்தல் முதலிய முக்கிய தேர்தல்களில் மோசடி செய்ததாக பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 என்ற செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

Image result for channel 4

அமெரிக்க அதிபர் தேர்தலில்,டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக  செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா எனும் இணைய நிறுவனம், கிட்டத்தட்ட 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் தகவல்களை திருடியதாக செய்தி வெளிவந்துள்ளது. 

அந்த வாடிக்கையாளர்களின் தகவல்களை கொண்டு அவர்களது செயல்பாடுகளை தெரிந்து,எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய தவறான செய்திகளை அந்த வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர், அங்கு நடந்த இந்த சட்டத்திற்கு புறம்பான செயல்களை சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

Image result for mark zuckerberg facebook

மோசடிகள் தெரியவந்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்துடனான உடன்ப்பாட்டை  முகநூல்  நிறுவனம் ரத்து செய்துள்ளது

இதனைபற்றி விசாரணை செய்ய இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் தலைமையில் எம்.பி.க்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் வரும் 26–ந் தேதிக்கு முன்  அவர்கள் முன்பு நேரில் ஆஜராகி, இது குறித்து முறையான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election forgery via facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->